என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    ஈரோட்டில் ஒரே நாளில் 1,066 பேருக்கு கொரோனா பாதிப்பு

    ஈரோட்டில் ஒரே நாளில் 1,066 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பொதுமக்கள் முககவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் ஒரே நாளில் 1,066 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பொதுமக்கள் முககவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

     ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. 

    இந்த மாத தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக 7&ந் தேதி தினசரி பாதிப்பு 100&ஐ கடந்தது.

    அதிலிருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் தினமும் 4 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் தொற்று பரவலை கட்டுபடுத்த முடியவில்லை.

    இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக மேலும் 1066 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இது நேற்று முன்தின த்தைவிட 90 கூடுதலாகும். இது கடந்த 5 மாதத்தில் இல்லாத அளவாக புதிய உச்சமாகபதிவாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 82 ஆக உயர்ந்துள்ளது. 

    நேற்று ஒரே நாளில் 491 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 

    இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 852 ஆக உயர்ந்துள்ளது.மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 721 ஆக உயர்ந்து உள்ளது. 

    தற்போது மாவட்டம் முழுவதும் 5,509 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    தற்போது பாதிப்பு ஏற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறி இருப்பதால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். 

    இன்னமும் மக்கள் பொறுப்பில்லாமல் வெளியே வரும்போது முககவசம் அணியாமல் வருவதை காணமுடிகிறது. இதுபோல் பொது இடங்களில் சமூக இடைவெளியும் கேள்வி குறியாகவே உள்ளது.

    Next Story
    ×