என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்.
  X
  கோப்புபடம்.

  ஆட்கள் பற்றாக்குறையால் பருத்தி சாகுபடியை கைவிடும் விவசாயிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பருத்தி சாகுபடி செய்ததில் இருந்து களை வெட்டுதல், உரமிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், மருந்து தெளித்தல், அறுவடை செய்தல் என அனைத்திற்கும் ஆட்கள் தேவை.
  திருப்பூர்:

  பருத்தி சாகுபடி செய்தால் அறுவடை பணிக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை,
  எனவே ஆட்கள் பிரச்சினை காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு  தள்ளப்பட்டனர். 

  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,

  ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். சாதாரண வேலைக்கு 500 ரூபாயும் கடினமான வேலைக்கு 700 ரூபாயும் கூலி வழங்கப்படுகிறது. களை எடுக்க ஆட்கள் கிடைக்காததால் களைக்கொல்லி தெளித்து களையை கட்டுப்படுத்துகிறோம். 

  பருத்தி சாகுபடி செய்ததில் இருந்து களை வெட்டுதல், உரமிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், மருந்து தெளித்தல், அறுவடை செய்தல் என அனைத்திற்கும் ஆட்கள் தேவை. விதை பருத்தியின் விலையும் ஆயிரக்கணக்கில் உள்ளது. உரம், மருந்து விலையும் அதிகரித்து விட்டது. மருந்து தெளிப்பவர்களுக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகிறது.பருத்தி செடிக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க தயங்குகின்றனர்.

  தொழிலாளர் கேட்கும் சம்பளம் கொடுத்தால் கட்டுப்படி ஆவதில்லை. எனவே ஆட்கள் அதிகம் தேவைப்படும் பருத்தி போன்ற பயிர்கள் சாகுபடி செய்வதை தவிர்த்து ஆட்கள் அதிகம் தேவைப்படாத பயிர்களை மட்டுமே சாகுபடி செய்கிறோம் என்றனர்.

   இதனிடையே இந்தாண்டு நல்ல மழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

  மேலும் அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளது. இதனால் இன்னும் ஓராண்டு காலத்திற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது. எனவே விவசாயிகள் ஓராண்டுப் பயிர்களான மஞ்சள், கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். 

  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 

  கடந்த சில ஆண்டுகளாக நீர்வளம் குறைவாக இருந்ததால் ஒன்றிரண்டு மாதங்களில் அறுவடைக்கு வரும் வகையில் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

  இந்த ஆண்டு அந்த நிலை மாறியுள்ளது.ஓராண்டுப் பயிர்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லை. விலை சரிந்தால் ஒரு சில மாதங்கள் விற்பனையைத் தள்ளிப்போட முடியும்.வேலைப்பளுவும் குறையும். இதனால், ஓராண்டுப்பயிர் சாகுபடியில் கவனம் செலுத்துகிறோம் என்றனர்.
  Next Story
  ×