என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை திருடி சென்ற வாலிபர்

    ஈரோட்டில் ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை திருடி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை திருடி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு திண்டல் அடுத்த வீரப்பம்பாளையம், செங்காடு செல்வம் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமார் திண்டலில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் ரெயில்வேயில் உயர் அதிகாரியாக வேலை பார்த்து வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து செந்தில் குமார் ஆட்டோவில் அந்த வாலிபரை ஏற்றுக்கொண்டு ரெயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

    அப்போது வீரப்பம் பாளையம் பிரிவு டாஸ்மாக் கடை அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்த போது அந்த வாலிபர் திடீரென ஆட்டோவை நிறுத்த சொன்னார். செந்தில் குமாரும் ஆட்டோவை நிறுத்தினார்.

    அப்போது அந்த வாலிபர் எனக்கு கொஞ்சம் மது வாங்கி தாருங்கள் என்று கூறி ரூ.150-ஐ செந்தில் குமாரிடம் கொடுத்தார்.  ரெயில்வேயில் பெரிய அதிகாரியாக இருப்பதால் நான் டாஸ்மாக் கடைக்கு செல்வது  சரியாக  இருக்காது. எனவே நீங்கள் சென்று மது வாங்கி வாருங்கள் என்று கூறியுள்ளார்.

    இதை யடுத்து செந்தில்குமார் மது வாங்க அந்த டாஸ்மாக் கடைக்கு சென்றார். பின்னர் மதுவை வாங்கி கொண்டு திரும்பி வந்தபோது ஆட்டோ மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். செந்தில்குமார் மது வாங்க சென்ற சமயத்தில் அந்த வாலிபர் ஆட்டோவைத் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து செந்தில் குமார் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×