என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கால்நடை மருத்துவ முகாமை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
  X
  கால்நடை மருத்துவ முகாமை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

  கால்நடை மருத்துவ முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உக்கடை ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாமை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  மெலட்டூர்:

  அம்மாபேட்டை ஒன்றியம், உக்கடை ஊராட்சி, சேர்மாநல்லூர் 
  கிராமத்தில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

  நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் 
  கே.வீ.கலைச்செல்வன் தலைமை வகித்தார். 

  ஒன்றியக்குழு துணைத்தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  உக்கடை ஊராட்சி மன்ற தலைவர் சாந்திதுளசிஅய்யா வரவேற்றார்.

  நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கால்நடைகளுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, 
  சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கினார். 

  முகாமில் மருத்துவர், ஏஞ்சலாசொர்ணமதி தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். 

  இந்த முகாமில் உக்கடை, சேர்மாநல்லூர் அதனை சுற்றியுள்ள 
  கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு 
  சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 

  நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணை தலைவர் மல்லிகாகருணாநிதி, 
  ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் மற்றும் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

  முகாமுக்கான ஏற்பாடுகளை உக்கடை ஊராட்சி மன்ற நிர்வாகிகள் 
  மற்றும் கால்நடைதுறையினர் செய்து இருந்தனர்.
  Next Story
  ×