என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி.
    X
    கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி.

    நடுரோட்டில் பாம்பு வந்ததால் திடீர் பிரேக் போட்ட லாரி கவிழ்ந்தது

    அந்தியூர் பகுதியில் பாம்பு மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்ட போது கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்தானது.
    அந்தியூர்:

    அந்தியூர் பகுதியில் பாம்பு மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்ட போது கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்தானது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் வழியாக சேலம் மாவட்டம் கொளத்தூருக்கு, வாழைக்காய் லோடு ஏற்றி வருவதற்காக  லாரி ஒன்று சென்றது.

    சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.

    அந்தியூர் பெரிய ஏரி அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது லாரியின் முன்பு பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்ட டிரைவர் வரதராஜன் பாம்பு மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக்கை போட்டார்.

    இதில் நிலை தடுமாறிய லாரி நடுரோட்டில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. உடனே டிரைவர் வரதராஜன் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறினர். 

    இந்த விபத்தில் வரதராஜன் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்த விபத்து குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×