என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்
மானிய விலையில் மூலிகை செடிகள் விநியோகம்
By
மாலை மலர்22 Jan 2022 7:34 AM GMT (Updated: 22 Jan 2022 7:34 AM GMT)

100 ரூபாய் மதிப்புள்ள மூலிகை தளை தொகுப்பு, மானிய விலையில் 25 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில், 8 மூலிகை செடிகள் தொகுப்பு மானிய விலையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழக அரசின் ஊட்டம் தரும் காய்கறி திட்டத்தில் கற்றாழை, கற்பூரவல்லி, முருங்கை, பப்பாளி, திப்பிலி, புதினா, கறிவேப்பிலை, எலுமிச்சை என 8 மூலிகை செடிகள் அடங்கிய தொகுப்பு, மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இந்த நாற்றுக்களை பொதுமக்கள் தங்கள் வீடுகளிலுள்ள சிறிய இடத்திலோ, தொட்டி அல்லது பைகளில் வளர்க்கலாம். தற்போதைய கொரோனா சூழலில் இந்த நாற்றுக்கள் வீட்டில் இருந்தால் எளிய முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.
100 ரூபாய் மதிப்புள்ள மூலிகை தளை தொகுப்பு, மானிய விலையில் 25 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன், 96598 38787, பிரபாகரன் 75388 77132 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Next Story
×