என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- மீன் வியாபாரி பலி

கன்னியாகுமரி:
சாமிதோப்பு கீழத் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 45). மீன் வியாபாரி.
இவர் இன்று காலை 7.45 மணி அளவில் கன்னியாகுமரியில் மீன் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிள் வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். கன்னியாகுமரி அருகே மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் செல்லும் போது இவரது மோட்டார் சைக்கிள் மீது கன்னியாகுமரியில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான பணகுடி நெருஞ்சி காலனியைச் சேர்ந்த அய்யப்பன் (25) என்பவரை கைது செய்தனர்.