என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலியான பெண்
மேலூர் அருகே கார் மோதி பெண் பலி
மேலூர் அருகே ரோட்டை கடக்க முயன்ற பெண் கார் மோதி பலியானார்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கீரனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் கருப்பையா.இவரது மனைவி அழகி (வயது60). இருவரும் நேற்று மதியம் உறவினர் வீட்டிற்கு சிலைமான் செல்வதற்காக வெள்ளரிப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் ரோட்டை கடக்க முயன்ற னர்.
அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார் அழகி மீது மோதியதில் தலையில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






