என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தொழிற்பயிற்சி மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
  X
  தொழிற்பயிற்சி மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

  மானாமதுரையில் அரசு தொழிற்பயிற்சி மையம் அமைக்க இடம் தேர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மானாமதுரையில் அரசு தொழிற்பயிற்சி மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
  சிவகங்கை
   
  சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு அரசினர் தொழிற் பயிற்சி மையம் அமைக்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டிகலெக்டர் மதுசூதன் ரெட்டி அரசினர் தொழிற் பயிற்சி மையம் அமையவுள்ள இடத்தை தேர்வு செய்யும் வகையில் மானாமதுரை நகர்பகுதிக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியையொட்டி செய்களத்தூர் ஊராட்சியில் அரசிற்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை பார்வையிட்டார். 

  மேலும், இந்தப்பகுதியை கலெக்டர் பார்வையிட்டதுடன் அங்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து மாணவ, மாணவிகள் தொழிற்பயிற்சி படிப்பிற்கு வந்து செல்ல ஏதுவாக சாலை வசதி மற்றும் பஸ் வசதிகள் குறித்து பார்வையிட்டு, இங்கு அரசினர் தொழிற் பயிற்சி மையம் அமைவதற்கான திட்ட வரைவுகள் தயார் செய்து அரசிற்கு அனுப்பி வைக்கப்படும் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

  இந்த ஆய்வின்போது மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
  Next Story
  ×