என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செம்மறி ஆடு கிடை
  X
  செம்மறி ஆடு கிடை

  வயல்களில் செம்மறி ஆடு பட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை மாவட்டத்தில் இயற்கை உரம் இட விவசாயிகள் தங்கள் நிலங்களில் செம்மறி ஆடுகளை பட்டியிட்டுள்ளனர்.
  பாபநாசம்:

  தஞ்சை மாவட்டம் பாபநாசம் அதன் சுற்றுவட்டார பகுதியில், 10 ஆயிரம் 
  ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக இப்பகுதியில் 
  அதிக பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

  நெல் சாகுபடிக்கு மாட்டு சாணம், ஆட்டு புழுக்கை, இலைகள் போன்ற இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இயற்கை உரம் பயன்பாடு குறைந்து செயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

  அளவுக்கதிகமாக செயற்கை உரங்களை இடுவதால் அரிசி மற்றும் வைக்கோல், புல் ஆகியவை நச்சுதன்மை உடையதாக மாறிவிடுகிறது. 
  இதை தவிர்க்க விவசாயிகள் தற்போது, இயற்கை உர பயன்பாட்டுக்கு 
  மாறி வருகின்றனர்.

  அதன் ஒரு பகுதியாக தற்போது அறுவடை முடிந்து நடவு செய்ய உள்ள வயல்களில் செம்மறி ஆடுகளை விவசாயிகள் பட்டியிட்டு வைக்கின்றனர். ஒரு பட்டியில் குறைந்தது, 100 ஆடுகள் உள்ளன. 

  இரவு நேரங்களில் நிலத்தில் ஆடுகளை பட்டியிடும் போது ஆடுகளின் புழுக்கை நிலத்தில் சேகரிக்கப்படுகிறது. இது ராகி பயிருக்கு சிறந்த 
  உரமாக அமைகிறது.

  இதற்காக ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் இருந்து ஆடுகளை ஓட்டி வருபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு பட்டிக்கு ரூ.500-க்கு மேல் விவசாயிகள் கொடுக்கின்றனர்.
  Next Story
  ×