என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதை விற்பனை நிலையங்களில்  விதைச்சான்று இயக்குநர்  ஆய்வு செய்தார்.
    X
    விதை விற்பனை நிலையங்களில் விதைச்சான்று இயக்குநர் ஆய்வு செய்தார்.

    விதை விற்பனை நிலையங்களில் விதைச்சான்று இயக்குநர் ஆய்வு செய்தார்

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைச்சான்று இயக்குநர் சுப்பையா ஆய்வு மேற்கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைச்சான்று இயக்குநர் சுப்பையா  ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் மூலம் தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் ரகங்களில் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்குவதற்காக நடப்பு சம்பா பருவத்தில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நம்பியூர் வட்டாரம் சுண்டக் காபாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் ஐ.ஆர்.20 ஆதாரநிலை ஒன்று விதைப்பண்ணையினை ஆய்வு செய்து தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்களை எடுத்துக்கூறினார்.

    மேலும் பெருந்துறை வட்டாரம் ஓசைப்பட்டி கிராமத்தில் அமைக்கப் பட்டுள்ள புதிய அதிக மகசூல் தரக்கூடிய  நிலக்கடலை கதிரி லெப்பாக்ஸி ஆதாரநிலை ஒன்று விதைப்பண்ணையினை ஆய்வு செய்து தரமான விதை உற்பத்தி தொழில் நுட்பங்களை எடுத்து கூறினார். 

    இந்த புதிய ரகமானது விதைப்பெருக்கம் மேற்கொ ள்ளப்பட்டு ஈரோடு மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

    மேலும் ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர், கோபி மற்றும் பெருந்துறை வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் இயக்குநர் திடீர் ஆய்வு மேற்கொ ண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அனைத்து விதை விற்பனை நிலையங் களிலும் தரமான சான்றளிக் கப்பட்ட மற்றும் உண்மை நிலை விதைகளையே விற்பனை செய்ய வேண்டும்.  

    விற்பனை செய்யப்படும் அனைத்து விதைக் குவியல்களும் கொள்முதல் பட்டியல்களுடன் விதை இருப்பு பதிவேட்டில் முறையாக இருப்பு வைத்திருக்க வேண்டும்.  விற்பனை பட்டியல் இல்லாமல்  விதைகளை விற்பனை செய்யக்கூடாது. 

    மேலும் விதை விற்பனைப் பட்டியலில் விற்பனை செய்யப்படும் விதையின், குவியல் எண் மற்றும் காலாவதி தேதி தவறாமல்¢ குறிப்பிட வேண்டும். 

    விதை வாங்கும் விவசாயியின் பெயர், முகவரி மற்றும் கையொப்பம் போன்றவை விற்பனை பட்டியலில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து உண்மை நிலை விதைக் குவியல்களுக்கும் பதிவுச் சான்றிதழ், முளைப்புத்திறன் அறிக்கை தவறாமல் வைத்திருக்க வேண்டும். 

    மேற்கண்ட விதை ஆய்வு நடவடிக்கைகளை தவறும் விதை விற்பனை நிலையங்கள் மீது விதைச் சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் படி நடவடிக்கை மேற்கோள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ஆய்வின் போது ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் ஜெயராமன், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம், ஈரோடு விதைச்சான்று அலுவலர்கள், விதை ஆய்வாளர்கள் மற்றும் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள்  ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×