search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி

    பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து கடந்த 3 நாட்களாகவே சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 350 லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்துள்ளது.

    வரத்து குறைவால் வெண்டைக்காய், முருங்கைக்காய், சின்ன வெங்காயம், ஊட்டி கேரட், முட்டை கோஸ் ஆகியவற்றின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. பீன்ஸ், கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து கடந்த 3 நாட்களாகவே சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

    இதன் காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் இல்லை. மேலும் தினசரி ஏராளமான மூட்டைகளில் காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்து வருவது மொத்த வியாபாரிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது. இன்று ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து 64 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்துள்ளது. இதன் காரணமாக மொத்த விற்பனை கடைகளில் தக்காளி கடும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    முதல் ரக தக்காளி ஒரு பெட்டி (14கிலோ) ரூ. 270-க்கு விற்கப்படுகிறது அதேபோல் தரத்தை பொறுத்து ரூ. 150-க்கும் தக்காளி பெட்டி விற்பனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

    இன்றைய காய்கறி மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-

    தக்காளி-ரூ.20, நாசிக் வெங்காயம்-ரூ.37, உருளைக்கிழங்கு-ரூ.16, சின்ன வெங்காயம்-ரூ. 90, உஜாலா கத்தரிக்காய்-ரூ.25, வரி கத்தரிக்காய்-ரூ.10, அவரைக்காய்-ரூ.15, வெண்டைக்காய்-ரூ.60, சவ்சவ்-ரூ. 6, முள்ளங்கி-ரூ.5, நூக்கல்-ரூ.20, முருங்கைக் காய்-ரூ.130, பீன்ஸ்-ரூ. 25, ஊட்டி கேரட்-ரூ.70, ஊட்டி பீட்ரூட்-60, பீட்ரூட் 40, கோவக்காய்-ரூ. 40, முட்டை கோஸ்-ரூ.35, வெள்ளரிக்காய்-ரூ.5, பன்னீர் பாகற்காய்-ரூ.35, புடலங்காய்-ரூ.35, கொத்தவரங்காய்-ரூ.50, குடை மிளகாய்-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.30, பச்சை மிளகாய்-ரூ.40, காலி பிளவர் ஒன்று-ரூ.15, இஞ்சி-ரூ.18, எலுமிச்சை பழம்-ரூ.30, தேங்காய்-ரூ.30.

    Next Story
    ×