search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிக்கட்டு காளை சிலை முன்பு வழிபாடு நடத்திய கிராம மக்கள்.
    X
    ஜல்லிக்கட்டு காளை சிலை முன்பு வழிபாடு நடத்திய கிராம மக்கள்.

    10 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு சிலை அமைத்து வழிபடும் கிராம மக்கள்

    காளை மாடு பல்வேறு போட்டிகளில் பங்கேற்றது. அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சிவல்பட்டி மந்தக்கருப்பன சுவாமி கோவில் காளை என்றே அழைக்கப்பட்டது.

    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்துள்ள கண்டாக்கிபட்டி ஊராட்சிக்குட்பட்டது சிவல்பட்டி கிராமம். இங்குள்ள மந்தக்கருப்பன சுவாமி கோவிலுக்காக கிராம மக்கள் சார்பில் கோவில் காளை வளர்க்கப்பட்டு வந்தது.

    இந்த காளை மாடு பல்வேறு போட்டிகளில் பங்கேற்றது. அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சிவல்பட்டி மந்தக்கருப்பன சுவாமி கோவில் காளை என்றே அழைக்கப்பட்டது. இதனால் கிராமத்தின் பெயரையும் பறைசாற்றி வந்தது.

    இந்தளவுக்கு பெயர் பெற்ற காளை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுப்பட்டி மஞ்சு விரட்டில் பங்கேற்றது. அதன்பின்னர் காளைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

    இதனால் சில நாட்களில் அந்த காளை பரிதாபமாக இறந்தது. இது கிராம மக்களிடடையே சோகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் காளையைகிராமத்தின் நடுவே உள்ள மந்த கருப்பன சுவாமி கோவில் அருகிலேயே புதைத்தனர். மேலும் மணிமண்டபமும் அமைக்கப்பட்டது. அதில் அந்த காளையின் முழு உருவத்தை சிலையாக வடித்து அதனை தங்களது குலதெய்வமாக கிராம மக்கள் வழிபட தொடங்கினர்.

    இந்த ஆண்டும் காளையின் 10-ம் ஆண்டு நினைவு தினம் கிராம மக்கள் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. காளையின் உருவ சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    மேலும் தற்போது அந்த காளைக்கு இணையாக கிராம மக்கள் சார்பில் வளர்க்கப்படும் காளைக்கு அலங்காரம் செய்து மரியாதைகள் செய்யப்பட்டன. மந்த கருப்பன சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பொங்கலிட்டு அதனை அனைவருக்கும் பகிர்ந்தனர்.

    Next Story
    ×