என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
தர்மகர்த்தா அருட்பெருஞ்ஜோதி சாமிக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடைபெற்றபோது எடுத்த படம்.
தைப்பூசவிழா கோவில் தர்மகர்த்தாவுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்
By
மாலை மலர்19 Jan 2022 10:06 AM GMT (Updated: 19 Jan 2022 10:06 AM GMT)

அனந்தபுரம் சுப்பிரமணிய சுவாமி மற்றும் குறிஞ்சிப்பை சுப்பிரமணிய சாமி ஆகிய கோவில்களில் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
செஞ்சி:
செஞ்சி பகுதி கோவில்களில் தைப்பூசம் நடைபெற்றது.
செஞ்சியை அடுத்த தேவதானம் பேட்டையில் உள்ள தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வெள்ளிக்கவச அலங்காரம் ஆகியவையும் தொடர்ந்து மதியம் பால்குட ஊர்வலம் பாலபிஷேகம் ஆகியவையும் நடைபெற்றது.
மாலையில் கோவில் தர்மகர்த்தா அருட்பெருஞ்ஜோதி சாமிகள் மார்பு மீது மாவு இடித்து மிளகாய் பொடி அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் தீமிதி திருவிழாவும் அதைத் தொடர்ந்து தேர்த்திருவிழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தனர். மேலும் வேன், கார் போன்றவைகளையும் இழுத்து சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் கலந்து கொண்டனர்.
இதேபோல் செஞ்சி கொத்தமங்கலம் சாலை சிறுகடம்பூர் கிருஷ்ணா புரத்தில் உள்ள கிருஷ்ண கிரிமலை அருகில் சுப்ரமணியசாமி கோவிலில் 42-ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு காலையில் சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் 108 திரவிய அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணியசாமியை தேரில் வைத்து தேர் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் மற்றும் ஆட்டோ, வேன் ஆகியவைகளை இழுத்து சென்றனர். இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் அனந்தபுரம் சுப்பிரமணிய சுவாமி மற்றும் குறிஞ்சிப்பை சுப்பிரமணிய சாமி ஆகிய கோவில்களில் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Next Story
×