search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த மெகா கவாத்து பயிற்சி ரத்து

    நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த கவாத்து பயிற்சி முகாம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டது.
    நெல்லை:

    பாளை ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை போலீசாருக்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாதாரண கவாத்து பயிற்சி நடைபெறும்.

    தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித் துள்ளதால் சமூக இடை வெளியுடன் ஆயுதப்படை போலீசாருக்கு குறைந்த எண்ணிக்கையில் கவாத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஜனவரி  மாதம் மெகா கவாத்து பயிற்சி 15 நாட்கள் நடை பெறும். இதில் அனைத்து ஆயுதப்படை போலீசாரும் ஒரே இடத்தில் கூடி  கவாத்து பயிற்சியை மேற்கொள்வார்கள்.

    மேலும் அவர்களின் உடமைகள், வாகனங்கள் அனைத்தும் உயர் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும்.

    தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித் துள்ளதால் மெகா கவாத்து பயிற்சியை ரத்து செய்ய வேண்டும் என்று போலீ சார் கள் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    பல்வேறு மாவட்டங்களிலும் தற்போது மெகா கவாத்து பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பாளை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் மெகா கவாத்து பயிற்சியையும் இந்த ஆண்டு உயர் அதிகாரிகள் ரத்து செய்தனர்.

    போலீசார்கள் முககவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்றி விழிப்புணர்வுடன் பணியாற்றவும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
    Next Story
    ×