என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
திருச்செங்கோடு பகுதியில் போலி டாக்டர்களை கண்டறிய குழு
திருச்செங்கோடு பகுதியில் போலி டாக்டர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டது.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்ன செய்யப்பட்டுள்ளது? போதுமான அளவு படுக்கை வசதிகள் உள்ளனவா? ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகள் உள்ளனவா? என்பன குறித்து விவாதிக்கப்பட்டது.
கொரோனா பரவலுக்கு போலி மருத்துவர்கள் முக்கிய காரணம் என்று எடுத்துக் கூறப்பட்டது. இதை தொடர்ந்து போலி டாக்டர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டது. போலி மருத்துவர்களை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
Next Story






