என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,827 ஆக உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்புநடவடிக்கை காரணமாக கொரோனாபாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்புநடவடிக்கை காரணமாக கொரோனாபாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது . இந்நிலையில் கடந்த 7-ந் தேதி தினசரி பாதிப்பு 100-ஐ கடந்து ஒவ்வொரு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவாக புதியஉச்சமாக மேலும் 613 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 506 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 168 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 964 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புடன் 65 வயது முதியவர் ஒருவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 715 ஆக உயர்ந்து உள்ளது.
தற்போது மாவட்டம் முழுவதும் 2,827 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் மொத்த பாதிப்பில் பாதிக்கு பாதி மாநகர் பகுதியில் சேர்ந்தவர்களுக்குத் தான் ஏற்பட்டு வருகிறது.
இதனால் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்புநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும் என தொடர்ந்து அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Next Story






