என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
நெல்லையில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
நெல்லையை அடுத்த பேட்டை அருகே நேற்று இரவு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் அதன் கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்தனர்.
நெல்லை:
நெல்லை தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து, பேட்டை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளத்திற்கு நேற்று இரவு ஒரு அரசு டவுன் பஸ் சென்றது.
டவுன் பஸ்சை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சிதம்பர ராஜ் (வயது 41) என்பவர் ஓட்டிச் சென்றார்.
பேட்டையை கடந்து அந்த பஸ் சென்றபோது, திடீரென ஒரு கும்பல் பஸ் மீது கல்வீசி தாக்கியது. இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
இதுகுறித்து டிரைவர் சிதம்பரராஜ் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசி கண்ணாடியை உடைத்த மர்ம கும்பல் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






