என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  மேட்டூர் அருகே நின்ற லாரி மீது பைக் மோதி ரெயில்வே என்ஜினீயர் சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேட்டூர் அருகே நின்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி ரெயில்வே என்ஜினீயர் பலியானார்.
  மேட்டூர்:

  ஈரோட்டை சேர்ந்தவர் ஆரோக்கியாராஜ் (வயது50). இவர் மேட்டூர் ரெயில் நிலையத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். குடும்பத்தினர் ஈரோட்டில் வசிப்பதால் ஆரோக்கியராஜ் மட்டும் மேட்டூரில் தங்கி பணிபுரிந்து வந்தார். 

  இவர் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சாம்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் மீது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. 

  இதில் படுகாயம் அடைந்த ஆரோக்கியராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×