என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  எருது விடும் விழா
  X
  எருது விடும் விழா

  நல்லம்பள்ளி அருகே எருது விடும் விழாவுக்கு போலீசார் அனுமதி மறுப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நல்லம்பள்ளி அருகே கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் எருது விடும் விழாவுக்கு போலீசார் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
  நல்லம்பள்ளி:

  தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, லளிகம், நார்த்தம்பட்டி உள்ளிட்ட கிராம பகுதி பொதுமக்கள் எருது ஓட்ட அனுமதி கேட்டு அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர். ஆனால் போலீசார் எருது ஓட்டுவதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தனர்.

  தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பொங்கல் பண்டிகையான கரிநாள் அன்று எருது ஓட்டுவது வழக்கம்.

  தற்போது கொரோனா கட்டுபாடுகளால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.இதனால் இந்த பொங்கல் பண்டிகையில் மாடு ஓட்டம், எருது ஓட்டம் மற்றும் திருவிழாக்களுக்கு தடை விதித்தது.

  இந்த நிலையில் நல்லம்பள்ளியை சுற்றியுள்ள கிராம பகுதி பொதுமக்கள் இன்று ஒருநாள் மட்டும் பொங்கலை கொண்டாடி மகிழும் வகையில் எருது ஓட்டுவதற்காவது அனுமதி வழங்க வேண்டும் என கேட்டு அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.

  ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் அனுமதி வழங்க முடியாது என போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
  Next Story
  ×