என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வலைகளை பழுதுபார்த்த விசைப்படகு மீனவர்கள்
    X
    வலைகளை பழுதுபார்த்த விசைப்படகு மீனவர்கள்

    வலைகளை பழுது பார்த்த விசைப்படகு மீனவர்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தொண்டி அருகே கடலுக்கு செல்லாமல் இருந்த விசைப்படகு மீனவர்கள் வலைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே ஆழ்கடல் சென்று மீன்பிடி தொழில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களின் பகுதியான சி லாஞ்சியடி மற்றும் சோழியக்குடியில் மீனவர்கள் வழக்கமாக சனிக்கிழமை கடலுக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரை திரும்புவர். 

    வெளிமாநிலங்களுக்கு இறால், நண்டு போன்ற கடல் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் வணிக நிறுவனங்கள் ஐஸ் பார்களை உடைத்துப்போட்டு பெட்டிகளில் அடைத்து வாகனங்களில் ஏற்றுவார்கள். 

    நேற்று முழு ஊரடங்கு என்பதால் வழக்கமான பணி எதுவும் நடைபெறாமல் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.  இதனால் ஓய்வில்  இருந்த விசைப்படகு மீனவர்கள்  மீன்பிடி வலைகளை பழுது பார்த்தும்,  பழுதான வலைகளுக்குப் பதிலாக புதிய வலைகளை பின்னும் பணியிலும் ஈடுபட்டனர்.
    Next Story
    ×