என் மலர்
உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட மாலக்கோயில்.
உடுமலையில் ஊரடங்கால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய மாலக்கோயில்
நேற்று முன்தினம் திருவிழா துவங்கியது ஆனால் மீண்டும் கொரானா அதிகரித்துள்ளதால் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை அருகே உள்ளசோமவாரப்பட்டியில் மாலக்கோயில் என அழைக்கப்படும் ஆல் கொண்ட மால் கிருஷ்ணன் கோவில் உள்ளது. பொங்கல் திருநாளையொட்டி இந்த கோயிலில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று நாள் திருவிழா கொண்டாடப்படும்.
கால்நடைகள் நோயின்றி வாழவும் செல்வம் பெருகவும் கால்நடைகளின் உருவ பொம்மைகளை செய்து நேர்த்திக்கடன் செலுத்தியும் கன்றுகளை தானமாக அளித்தும் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும் விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.
நேற்று முன்தினம் திருவிழா துவங்கியது ஆனால் மீண்டும் கொரானா அதிகரித்துள்ளதால் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதனால் கோயிலில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் மட்டும் நடைபெற்றன பக்தர்கள் யாரும் வரவில்லை. இதனால் கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. திருவிழாக் கடைகள் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகள் எதுவும் அமைக்கப்படாததால் கோயில் வளாகம் களை இழந்து காணப்பட்டது.
Next Story






