என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  வயலில் இறந்து கிடந்த லாரி ஓட்டுநர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவாரூர் அருகே வயலில் இறந்து கிடந்த லாரி ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருவாரூர்:

  திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே உள்ள கோம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வல்லரசு. (வயது 42). லாரி ஓட்டுனர். 

  இவர் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை மேல அயப்பாக்கம் பகுதியில் தங்கி பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் கிட்டு (52). கோம்பூரில் வசித்து வருகிறார். 

  இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.
  வல்லரசு அவ்வப்போது தனது சொந்த ஊருக்கு வந்து செல்வார். வல்லரசு, கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பொங்கல் பண்டிகைக்காக கோம்பூருக்கு வந்துள்ளார். 

  இந்நிலையில் நேற்று முன்தினம் உச்சிவாடியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு செல்வதாக, அண்ணன் கிட்டுவிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். 

  ஆனால் வல்லரசு தனது தங்கை வீட்டிற்கு செல்லாமல் கமலாபுரம் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

  வல்லரசு நேற்று கமலாபுரம் அருகில் உள்ள வயல்வெளியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இறந்து கிடந்துள்ளார்.

  தகவலின் பேரில் வந்த கொரடாச்சேரி போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை 
  மேற்கொண்டுள்ளனர்.
  Next Story
  ×