search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கும்பகோணத்தில் ரவுடி வெட்டி படுகொலை

    கும்பகோணத்தில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பட்டீஸ்வரம்:

    கும்பகோணம் புறப்பகுதியான மேம்பாலம் நீடாமங்கலம் சாலை அருகிலுள்ள ஊசிமாதக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமு மகன் உச்சாணி என்கிற விமல் (வயது 25). பிரபல ரவுடி. 

    இவரை நேற்று இரவு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர் தகவலின்பேரில் திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன், நாச்சியார்கோவில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து எஸ்.பி. ரவளி பிரியா வந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடன் கைது செய்ய உத்தரவிட்டார். 

    இதையடுத்து டி.எஸ்.பி. வெற்றிவேந்தன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் கவியரசன், விக்னேஸ், ரமணி ஆகிய போலீசார் மற்றும் தஞ்சை சரக தனிப்படை 
    சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன், தலைமை காவலர் உமாசங்கர். 

    மற்றும் போலீசார் கவுதம், அருண், அழகு நவீன், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கும்பகோணம் பாரதி நகர் ராவணன் மகன் தர்மராஜ் (28) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய மேலும் 5 பேரை பிடிக்க புறவழிச்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டடனர். 

    அப்போது சந்தேகப்படும்படியாக வந்த தர்மராஜின் தாயார் ரேமா மற்றும் அவனது கூட்டாளிகள் சந்தோஷ், சதீஷ் ஆகிய 3 பேரை விசாரித்ததில் அவர்கள் இக்கொலையில் சம்பந்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களையும் கைது செய்தனர். 

    மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×