என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
நெல்லையில் பறவைகள் கணக்கெடுப்பு 20-ந்தேதி தொடக்கம்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளங்களில் வசிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளை கணக்கெடுக்கும் பணி வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது.
நெல்லை:
வடகிழக்கு பருவமழையின் போது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழியும். இந்த நேரங்களில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் ஏராளமானவை குளங்களில் வந்து தங்கும்.
நெல்லை மாவட்டத்தில் கூந்தங்குளம், நயினார்குளம், வடக்கு கழுவூர், தென்காசி மாவட்டத்தில் வாகைக்குளம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் செட்டிகுளம் உள்ளிட்ட குளங்களுக்கு ஆண்டு தோறும் சீசன் நேரங்களில் பறவைகள் வந்து குவியும்.
கடந்த சில ஆண்டுகளாக பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து கூடு கட்டி இனப் பெருக்கம் நடத்தி வருகிறது. இவற்றின் வாழ்விடங்களான நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம், நெல்லை வனத்துறை உள்ளிட்டவை இணைந்து பறவைகளை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி 12-வது தாமிர பரணி பறவைகள் கணக் கெடுப்பு வருகிற 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பில் கலந்து கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் https://forms.gle/NPF2eiWeQ25ivF6WA என்ற லிங்கில் பதிவு செய்யலாம்.
மேலும் twbc2020@gmail.com மின்னஞ்சல் மூலம், செல்போன் எண் 9994766473 வழியாகவும் பதிவு செய்ய வரும் 19-ம் தேதி கடைசி நாளாகும். கடந்த ஆண்டு 62 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story