search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஊரடங்கு விதிகளை மீறிய 500 பேருக்கு அபராதம்

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 2-வது வாரமாக நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதனை மீறி வெளியே சுற்றிய 500 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
    நெல்லை:

    கொரோனா  3-வது அலை பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 2-வது வாரமாக நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

    நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

    நெல்லை புறநகர் மாவட்டத்தில் மட்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி நேற்று முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த 150 பேருக்கு அபராதம் விதித்தனர். ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்திலும் முகக்கவசம் அணியாத தலா 100&க்கும் மேற்பட்டவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. நெல்லை மாநகரில் முகக் கவசம் அணியாத 150 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

    இதுபோல நெல்லை மாவட்டத்தில் திருட்டுத் தன மாக மதுவிற்றதாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    தென்காசி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மேற்பார்வையில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி அனுமதி இல்லாமல் மதுவிற்றதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 140 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை மாநகரில் மதுபதுக்கி விற்றதாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    தூத்துக்குடி மாவட்டத்திலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி அனுமதியின்றி மது விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    நெல்லை மாநகரில் நேற்று முழு ஊரடங்கை மீறி சைக்கிள்களில் கேன் வைத்து சிலர் டீ விற்பனை செய்தார்கள். முக்கிய இடங்களில் அவர்கள் ஏராளமாக கூட்டத்தை கூட்டி டீ விற்றதால் 2 டீ வியாபாரிகள் மீது ஊரடங்கை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மேலும் முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே வந்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் முழுஊரடங்கை மீறி வெளியே வந்ததாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் முழு ஊரடங்கை மீறிய தாக வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட போலீசார் வாரநாட்களிலும் தொடர்ந்து கொரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
    Next Story
    ×