search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    விசாரணையில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு: போலீசாரை கைது செய்ய வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

    பிரபாகரனின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நகைத்திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. காவல் துறையினர் தாக்கியதே மாற்றுத் திறனாளியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஜனவரி 8-ந் தேதி கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்படாமல் சேந்தமங்கலம் காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக வைத்து தாக்கப்பட்டிருக்கிறார். அதனால், சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் பிரபாகரனுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்!

    பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பாக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது போதுமானதல்ல. பிரபாகரனின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×