என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பல்லடம் போலீஸ் நிலையத்தில் 24 போலீசாருக்கு கொரோனா பரிசோதனை
அரசு வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
அரசு வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் மாவட்டத்தில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக நாள் ஒன்றின் பாதிப்பு 300-க்கும் குறைவாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டத்தில் 667 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே பல்லடம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 25-க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.
இதில் அவினாசி, தாராபுரம், இடுவாய், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 தலைமை காவலர்களுக்கு சளி பாதிப்பு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் 4 பேருக்கும் தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 7 போலீசாரும் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 24 போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். முடிவு இன்று மாலை வெளிவரும் என தெரிகிறது. இதற்கிடையே போலீஸ் நிலையம் முழுவதும் சுகாதார துறையினர் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
Next Story