search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆலங்குளத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்

    ஆலங்குளத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்களை தாக்கிய 2 ரவுடிகளை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அந்த வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்.
    ஆலங்குளம்:

    சுரண்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் விமலா(வயது 32) என்பவர் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் வசிக்கும் தனது தங்கை வீட்டுக்கு பொங்கல் படி கொடுக்க சென்றார். 

    அப்போது நெட்டூர் பஸ் நிறுத்தம் அருகே 5 பேர் கும்பல் அவரை தாக்கியது. இதுதொடர்பாக நெட்டூரை சேர்ந்த அப்பு என்ற அப்ரானந்தம், வேல்முருகன், முருகன், கண்ணன், மாரியப்பன் ஆகிய 5 பேர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

    இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் தலைமையிலான போலீசார் ஓடைமறிச்சான் பகுதியில் ரோந்து சென்றபோது அந்த வழியாக வந்த வேல்முருகன் மற்றும் அப்ரானந்தத்தை வழிமறித்தனர். 

    அப்போது இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோரின் கை விரல்களை கடித்துவிட்டு அப்ரானந்தம் தப்பி செல்ல முயன்றார். 

    ஆனால் அதற்குள் 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மோட்டார் சைக்கிளில் இருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மேற்பார்வையில் இயங்கும் ஒரு தனிப்படை, ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் உள்ள தனிப்படை என 2 தனிப்படையினர் அமைக்கப்பட்டு உள்ளனர். 

    அவர்கள் 5 பேரையும்  தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×