என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழக்கு பதிவு
காஞ்சிபுரத்தில் ஊரடங்கை மீறி சுற்றிய 598 பேர் மீது வழக்கு
முழு ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி தேவையின்றி வாகனங்களில் சுற்றிய 598 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் சுமார் 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் முக்கிய சந்திப்பு, சாலைகளில் சோதனையில் ஈடுபட்டு தேவையின்றி சுற்றிவரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுத்தும், நோய்தொற்று விழிப்புணர்வு அவசியத்தையும் வலியுறுத்தினர். அத்தியாவசிய சேவைகளுக்கும், அது சார்ந்த பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி தேவையின்றி வாகனங்களில் சுற்றிய 598 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
Next Story