என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்ற 49 பேர் கைது
போலீஸ் எஸ்.பி கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் சட்டவிரோதமாக மது, கள், சாராயம் விற்பனை தொடர்பாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் விடுமுறை நாளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 49 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து கூறப்படுவதாவது:
திருப்பூர், மாவட்டத்தில் திருவள்ளுவர், தினத்தையொட்டி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் எஸ்.பி கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் சட்டவிரோதமாக மது, கள், சாராயம் விற்பனை தொடர்பாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 49 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1,078 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்,
Next Story