என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் பறிப்பு
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து 2 பேரிடம் செல்போன், பணம் பறிப்பு
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து 2 பேரிடம் செல்போன், பணம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த குருவாயல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணன் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான ஹேமச்சந்திரன் என்பவருடன் குருவாயல் கிராமத்தில் இருந்து பூண்டியில் மீன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அவர்கள் திருவள்ளூரை அடுத்த பீமன் தோப்பு சர்ச்சை அருகே வந்து கொண்டிருந்தபோது, மதுபோதையில் 5 பேர் சாலையில் படுத்து கிடந்தார்கள். இதைக்கண்ட இரண்டு பேரும் வழி விடுமாறு கேட்டு உள்ளனர். இதில் ஆத்திரமடைந்த 5 பேரும் சரவணனையும், ஹேமச்சந்திரனையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி அவர்கள் சரவணன் சட்டை பாக்கெட்டில் இருந்த ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும், ஒரு செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சரவணன் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story