search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் கோரிக்கை
    X
    விவசாயிகள் கோரிக்கை

    மானாமதுரை தாலுகாவில் நெற்பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகள்

    மானாமதுரை தாலுகாவில் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் அழித்து வருகின்றன. அவைகளிடமிருந்து நெற்பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா மேலபசலை, கீழமேல்குடி, ராஜகம்பீரம், கட்டிக்குளம் தீர்த்தான் பேட்டை, இடைக்காட்டூர், மேலமேல்குடி, கொம்புக்காரனேந்தல் பணிக்கனேந்தல், சோமாத் தூர் ஆகிய பகுதிகளில்  நெற்பயிர் வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

    இந்த நிலையில்    இரவு நேரங்களில் வயலுக்குள் புகுந்து  காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களை  அழித்து வருகின்றன.  இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன் ஆகியோரிடம் விவசாயிகள் தெரிவித்தனர். 

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மக்கள் சந்திப்பு இயக்கம் மேலப்பசலை கிராமத்தில் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன்   செயலாளர் ஆண்டி,     உறுப்பினர் ராஜாராமன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வீரய்யா  ஆகியோர் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.

    அறுவடை நடக்கும் என்ற சூழ்நிலையில் பன்றிகள் தொல்லையால் நெற்பயிர்கள் சேதம் அடைகின்றன. இரவு நேரத்தில் வயலுக்குள் கட்டில் போட்டு படுத்துக்கொண்டு பாதுகாக்கிறோம். பன்றிகள் வந்தால் வெடிகளை வெடித்து  விரட்டுகிறோம்.  இதையும் மீறி பன்றிகள் வயலுக்குள் புகுந்து அறு வடைக்கு தயாரான பயிர்களை அழித்து வருகிறது. 

    ராஜகம்பீரத்தில் விவசாயத்தை பொருத்த வரைக்கும் பகலில் மாடுகளால் தொல்லை ஏற்படுகிறது. இரவில் பன்றிகளால் விவசாயம் அழிக்கப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட  குழு உறுப்பினர்காசிராஜன் தெரிவித்தார். 

    விவசாயத்தை பொருத்த வரை  இந்த ஆண்டு நல்ல மழை பெய்தாலும் கடந்த ஆண்டுகளில் மழை பொய்த்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த ஆண்டு விவசாயிகளுக்கு பன்றிகளால் பாதிப்பு ஏற்படுகிறது. பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். பன்றிகளிடம் இருந்து விவசாயத்தை காப்பதற்கு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×