என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
சென்னிமலையில் தைப்பூச திருவிழா நடத்த அனுமதி
சென்னிமலை முருகன் கோவிலில் தைபூச திருவிழா நடந்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் தைபூச திருவிழா நடந்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச தேர்திருவிழா நடத்த அனுமதி வழங்கவில்லை என்றால் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக முருக பக்தர்கள் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் தேரோட்டம் அல்லாத மற்ற நிகழ்வுகளை நடத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் கோவில் நிர்வாகம் சார்பில் தைப்பூச திருவிழா நடக்கிறது.
அதன்படி வருகிற 17-ந் தேதி மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் விநாயகர் வழிபாடு, கலச ஆவாஹணம், பிராயசித்த ஹோமம், முதல்கால யாக பூஜை, பூர்ணாகுதி, திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளது.
தைப்பூச தினமான 18-ந் தேதி அன்று அதிகாலை 4.30 மணிக்கு 2-ம் கால யாகபூஜை, பூர்ணாகுதி, உற்சவர் அபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் கைலாசநாதர் கோவிலில் உள்பிரகாரத்திற்குள் சுவாமி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் நிர்வாகம் மூலமே நடத்தப்படுகிறது.
அதேசமயம் 17-ந் தேதி மாலை நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்திற்கு பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அபிஷேகத்திற்கு உரிய பொருட்களை அன்று மாலை 5 மணிக்குள் கோவில் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களில் வழங்க வேண்டும்.
மேலும் 18-ந் தேதி காலை நடைபெறும் அபிஷேகத்திற்கு உரிய பொருட்களை அன்று அதிகாலை 5 மணிக்குள் அதற்குரிய பாத்திரங்களில் வழங்குமாறும் கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story






