என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேப்பங்கிழங்கு சுத்தம் செய்யும் பணியில் விவசாயிகள்.
குறைவாக விலைபோன சேப்பங்கிழங்கு - விவசாயிகள் வேதனை
பாபநாசம் பகுதியில் சேப்பங்கிழங்கு குறைவாக விற்பனையானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சேப்பங் கிழங்கு பயிரிடப்பட்டிருந்து.
விவசாயி பொன்னையன் என்பவர் கூறியதாவது:-
இப்பகுதியில் சேப்பங் கிழங்கு, கருணைக்கிழங்கு ஒரு ஏக்கரில் ரூ.60,000 செலவில் பயிரிடப்பட்டது. சமீபத்தில் பெய்த தொடர் கனமழையினால் கருணைக்கிழங்கு சேதம் ஏற்பட்டது.
சேப்பங்கிழங்கில் போதுமான மகசூல் இல்லை. இங்கு 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு சேப்பங்கிழங்கை சுத்தம் செய்து மூட்டையாக ஏற்றி தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றதில்
ஒரு கிலோ 8 ரூபாய்க்கும் குறைவாக விலை போனது.
ஒரு மூட்டை 400-க்கும் குறைவாக விலை போவதால் எங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை. எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார்.
Next Story