என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திண்டுக்கல் பழைய நீதிமன்ற கட்டிடம் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம்
  X
  திண்டுக்கல் பழைய நீதிமன்ற கட்டிடம் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம்

  திண்டுக்கல்லில் கூடுதல் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் மாவட்டத்தில் தொற்று அதிகரிப்பால் கூடுதல் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது
  திண்டுக்கல்:

  தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 10க்கும் கீழ் தொற்று உறுதிசெய்யப்பட்டு வந்தது. ஜனவரி மாதத்திலிருந்து படிபடியாக உயர்ந்து தற்போது சராசரியாக 100ஐ தாண்டி பதிவாகி வருகிறது.

  நேற்று முன்தினம் 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 109 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனா தொற்றைப் போலவே ஒமைக்ரான் பரவலும் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2900 படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளது.

  கொரோனா 2ம் அலையின் போது தனியார் மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது 3ம் அலையில் தொற்று தீவிரம் காட்டி வருவதால் கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

  திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரியில் ஏற்கனவே கொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்ட நிலையில் தற்போது 180 படுக்கை வசதிகளுடன் கூடிய மையம் தயார் நிலையில் உள்ளது. மேலும் திண்டுக்கல் பழைய நீதிமன்ற கட்டிடம் பின்புறம் கொரோனா சிகிச்சை மையம் தயார்நிலையில் உள்ளது.

  தனியார் ஆஸ்பத்திரிகளில் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. தற்போது வரை 370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் சிலர் வீட்டு சிகிச்சையிலும் உள்ளனர். தற்போது தினசரி பாதிப்பு சராசரியாக 100ஐ தாண்டி வருவதால் இன்னும் ஓரிரு நாளில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டு நிறைந்துவிடும்.

  இதனை கருத்தில் கொண்டு கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைக்கவும், அங்கு பணியாற்ற மருத்துவர், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோரை நியமனம் செய்யும் பணியிலும் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
  Next Story
  ×