என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
2 கோவில்களில் 3 உண்டியல்களை உடைத்து திருட்டு
கபிஸ்தலம் பகுதியில் 2 கோவில்களில் 3 உண்டியல்களை உடைத்து மர்மநபர்கள் காணிக்கைகளை திருடிச் சென்றனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள கூனஞ்சேரி கிராமத்தில் செல்வ விநாயகர் கோவிலில் குருக்களாக பணியாற்றி வருபவர் நடுதெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 48).
இவர் சம்பவத்தன்று அதிகாலை கோவிலை திறக்க வந்தபோது பின்பக்க கேட்டு உடைக்கப்பட்டு கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து
அதிலிருந்த காணிக்கைகள் மற்றும் ரூ.4 ஆயிரம் மதிப்பு டி.வி.டி. பிளேயரையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. பாலசுப்பிரமணியன் இதுபற்றி கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார்.
இதேபோல் கபிஸ்தலம் அருகே உள்ள ஆதனூர் திரவுபதி அம்மன் கோவிலில் பொறுப்பாளராக ஆதனூர் தெற்கு தெரு அண்ணாதுரை (61) என்பவர் இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று அதிகாலை இவர் கோவிலை திறக்க வந்தபோது பின்பக்கம் வழியாக மர்மநபர்கள் ஏறி குதித்து உள்ளே நுழைந்து 2 உண்டியல்களை உடைத்து ரூ.50 ஆயிரம் வரையிலான பக்தர்களின் காணிக்கைகளை திருடிச்சென்றது தெரிய வந்தது
இதுபற்றி அண்ணாதுரை கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் தஞ்சையில் இருந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர்.
பாபநாசம் டி.எஸ்.பி பூரணி, கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேஸி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து
தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story