என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரகுநாத்
  X
  ரகுநாத்

  நத்தத்தில் கட்டிட தொழிலாளி குத்திக்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நத்தத்தில் முன் விரோதம் காரணமாக கட்டிட தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்டார்
  நத்தம், ஜன:

  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலம் பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ரகுநாத் (34).சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கும் அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கொடுக்கல், வாங்கல் தகராறில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் வேலம்பட்டி அருகே இருவருக்கும் இது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரகுநாத்தை குத்தியுள்ளார்.


  இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ரகுநாத் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று நத்தம் போலீசார் இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×