என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பரமத்திவேலூர் பகுதியில் பொங்கல் விற்பனை மும்முரமாக நடைபெறும் காட்சி.
  X
  பரமத்திவேலூர் பகுதியில் பொங்கல் விற்பனை மும்முரமாக நடைபெறும் காட்சி.

  மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கரும்பு விற்பனை மும்முரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமத்திவேலூர் பகுதிகளில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கரும்பு விற்பனை மும்முரமாக நடந்தது.
  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செங்கரும்பு பயிரிடப்படுகிறது. கடந்த வருடம் ஏற்பட்ட வறட்சியான சூழலால் கரும்பு விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

  இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்புகள்  வரத்து அதிகமாக காணப்படுகிறது. இந்தாண்டு விளைச்சல் அதிகரிப்பால் விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த வருடம் 20 செங்கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனையானது. 

  தற்போது வரத்து அதிகரிப்பால் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் ஒரு ஜோடி செங்கரும்பு ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. பரமத்தி வேலூர் பகுதியில் இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கரும்பு விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

  இது குறித்து கரும்பு வியாபாரிகள் கூறுகையில், இந்த வருடம் பருவமழை சீராக பெய்ததால் பல ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட செங்கரும்புகள் உரிய நேரத்தில் அறுவடை செய்யப்பட்டது. 

  தண்ணீர் பற்றாக்குறை இல்லாததால் விளைச்சல் அதிகமாகியுள்ளது. செங்கரும்பு விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டதால் பல்வேறு பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.   

  ஆட்கள் கூலி, டீசல் விலை உயர்வு, லாரி வாடகை உள்ளிட்டவைகளின் விலை உயர்வால் செங்கரும்பின் விலை போதுமானதாக இல்லை. பண்டிகைகளுக்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

  Next Story
  ×