என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இளைஞர் போக்சோவில் கைது
16 வயதான 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறியும், திருமண ஆசைகாட்டியும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
உடுமலை:
உடுமலை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் சிறையில் அடைத்தனர். உடுமலை அமராவதி நகர் சாயப்பட்டறை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன் என்பவர் வினோத் ( 27).
திருமணமான இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறியும், திருமண ஆசைகாட்டியும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமியின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரியவே இது குறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி இளைஞரின் நடவடிக்கை குறித்து கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் உடுமலை அனைத்து மகளிர் போலீசார் மணிகன்டனை கைது செய்து விசாரனை நடத்தி போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.
Next Story