என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த மாரியப்பன்.
உடுமலையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
விற்பனைக்காக வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மடத்துக்குளம்:
உடுமலையில் வீட்டுதோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். உடுமலை அருகே உள்ள கண்ணமநாயக்கனூர் பள்ளிவலசை சேர்ந்தவர் மாரியப்பன் (55 ). இவர் தனது வீட்டுத்தோட்டத்தில் மற்ற செடிகள் இடையே கஞ்சா செடிகளை வளரத்து வந்துள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கஞ்சா வளர்ந்திருப்பதை அறிந்தனர். கஞ்சா செடிகளை அகற்றிய போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
மேலும், மாரியப்பனை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மாரியப்பன் மீது விசாரனை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.
Next Story