என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நீரில் மூழ்கி பலி
  X
  நீரில் மூழ்கி பலி

  ஊத்துக்கோட்டை அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊத்துக்கோட்டை அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஊத்துக்கோட்டை:

  சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மகன் விக்னேஷ். இவர் கார் மெக்கானிக். விக்னேஷ் தனது 5 நண்பர்களுடன் ஊத்துக்கோட்டை அருகே தொழவேடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் சந்திரன் வீட்டுக்கு பொங்கல் விழா கொண்டாட வந்திருந்தார்.

  இந்தநிலையில் அவர் அருகே உள்ள ஆரணி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். சமீபத்தில் பெய்த பலத்த மழையால் ஆரணி ஆற்றில் வெள்ளம் பாய்ந்து செல்கிறது. குளித்துக் கொண்டிருந்த போது விக்னேஷ் ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டு தண்ணீரில் மூழ்கினார்.

  நண்பர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து அவர்கள் தேர்வாய்கண்டிகை கிராமத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமரன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து உடலை மீட்டனர்.

  ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×