என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவிலில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை
  X
  கோவிலில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை

  போச்சம்பள்ளி அருகே கோவிலில் வீசப்பட்டு கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போச்சம்பள்ளி அருகே கோவிலில் பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மத்தூர்:

  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வாடமங்கலம் பகுதியில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கோவில் அருகே குழந்தை அழுகை சத்தம் நீண்ட நேரமாக கேட்டுள்ளது. இதையறிந்த பொதுமக்கள் கோவிலில் சென்று பார்த்த போது பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்தது தெரிய வந்தது.

  இது குறித்து பொதுமக்கள் பாருர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து பச்சிளம் பெண் குழந்தையை கைபற்றி போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் கிருஷ்ணகிரி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

  இது குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் குழந்தையை வீசிசென்ற கல்மனம் படைத்த தாய் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

  கோவிலில் பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×