என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நள்ளிரவில் விசாரணை நடத்திய காட்சி
  X
  கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நள்ளிரவில் விசாரணை நடத்திய காட்சி

  சொத்து தகராறு-மதுபோதையில் 2 பேர் கொலை: போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொங்கல் பண்டிகையன்று திருச்சியில் நடந்த இரு வேறு கொலை சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  திருச்சி:

  திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த பச்சபெருமாள்பட்டி ஊராட்சியிலிருந்து ஆர்.கோம்பை செல்லும் வழியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55).

  இதில் ஆறுமுகம் வெங்கடாசலபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுனராக வேலைபார்த்து வந்தார். இவரது மகன் மணிகண்டன் (29). ஆறுமுகத்தின் சகோதரர் முருகேசன் (50). இவரது மகன் மருதுபாண்டி (27).

  ஆறுமுகம், முருகேசன் ஆகியோருக்கான சொத்தை பிரிப்பதில் முறையாக எதுவும் பின்பற்றப்படவில்லை. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ஆறுமுகத்தின் தாய் பழனியம்மாள் முருகேசனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார்.

  இந்த நிலையில் நேற்றிரவு ஆறுமுகம் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால் அங்கு ஏராளமானோர் திரண்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உப்பிலியபுரம் போலீசார் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  பல ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த சொத்து தகராறு பொங்கல் பண்டிகையான நேற்று பூதாகரமாக வெடித்தது. இதில் முருகேசனுக்கு ஆதரவாக இருந்த தாய் பழனியம்மாளை ஆறுமுகம் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசனின் மகன் மருது பாண்டி, அக்காள் மகன் கண்ணன் ஆகியோர் சேர்ந்து ஆறுமுகத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியதோடு, கழுத்தையும் அறுத்துள்ளனர். இது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

  திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், முசிறி டி.எஸ்.பி. அருள்மணி, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். நள்ளிரவு வரை விசாரணை நடந்தது.

  இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மருதுபாண்டி உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

  மற்றொரு சம்பவம்...

  திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோவத்தங்குடி குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் தனது நண்பர் மனோகர் என்பவருடன் நேற்று மாலை மது அருந்த சென்றார். தலைக்கேறிய போதையால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறு உருவானது.

  இதில் மனோகரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பன்னீர்செல்வத்தை சரமாரியாக வெட்டினார். பலத்த காயம் அடைந்த பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் மனோகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

  இதில் பன்னீர்செல்வத்தை அரிவாளால் வெட்டிவிட்டு மனோகர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

  இதுகுறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடம் சென்று பன்னீர்செல்வத்தின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனோகரை தேடி வருகின்றனர்.

  பொங்கல் பண்டிகையன்று திருச்சியில் நடந்த இரு வேறு கொலை சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  Next Story
  ×