என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மூதாட்டி தற்கொலை மூதாட்டி தற்கொலை](https://img.maalaimalar.com/Articles/2022/Jan/202201131554325508_Tamil_News_Madurai-News-Grandmother-Suicide_SECVPF.gif)
X
மூதாட்டி தற்கொலை
கொரோனா பயத்தில் மூதாட்டி தற்கொலை
By
மாலை மலர்13 Jan 2022 3:54 PM IST (Updated: 13 Jan 2022 3:54 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மதுரையில் கொரோனா பயத்தில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை
மதுரை செல்லூர் வைத்தியநாதபுரம் பாபநாசம் மனைவி மீனா (வயது 74). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், இருமல் ஆகியவை தொடர்ந்து இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் நோய் குறையவில்லை. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்ப்பது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் கொரோனா நோய் பாதிப்புக்கு ஆளாகி விட்டோமே? என்று பயந்த மீனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை அம்பலக்காரன் பட்டியை சேர்ந்தவர் மூக்கன் (47). இவருக்கு குடி பழக்கம் இருந்தது-. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த மூக்கன் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை திருநகர் மீனாட்சி காலனி பெரியார் தெருவைச் சேர்ந்தவர் புவனேசுவரி (26). இவர் அடிக்கடி செல்போனை பயன்படுத்தினார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதில் விரக்தி அடைந்த புவனேசுவரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Next Story
×
X