என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேரியூரில் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய காட்சி.
  X
  தேரியூரில் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய காட்சி.

  மக்களோடு மக்களாய் பணி செய்பவர் முதல்-அமைச்சர் ஸ்டாலின்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடன்குடி அருகே உள்ள தேரியூரில் நடந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக இருந்து மக்கள் பணி செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பேசினார்.
  உடன்குடி:

  உடன்குடி தேரியூர் நியாயவிலைக்கடையில் நடந்ததமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் விழாவிற்கு கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப் அலி தலைமை தாங்கினார்

  உடன்குடி யூனியன்  தலைவர் பாலசிங், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ.கோகிலா, திருச்செந்தூர் ஏ.டி.ஏஸ்.பி. ஹர்ஷ்சிங், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர்கள் மாரியப்பன் (தூத்துக்குடி) வளர்மதி (திருச்செந்தூர்) வட்ட வழங்கல் ஆலுவலர் சங்கரநாராயணன், கூட்டுறவு சார்பதிவாளர் மானராஜா, செட்டியாபத்து ஊராட்சி மன்றத்தலைவர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக அரசின் பொங்கல் சிறப்புப் தொகுப்புகளை வழங்கி பேசியதாவது:- 

  தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் பணி செய்வதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும்.
  Next Story
  ×