என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கல்லிடைக்குறிச்சியில் விவசாயி குடும்பத்துடன் போராட்டம்
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த விவசாயியின் மகன்கள் 2 பேரை தேர்ச்சியென அறிவிக்காததாக கூறி தனியார் பள்ளியை கண்டித்து விவசாயி தனது குடும்பத்துடன் போராட்டம் நடத்தி வருகிறார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குமார கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி மகன் பூவலிங்கம் (வயது 44). விவசாயி.
இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், பூதத்தார், சிவசண்முகம் என்ற மகன்களும் உள்ளனர்.
பூதத்தார் மற்றும் சிவசண்முகம் ஆகியோர் அம்பை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 மற்றும் 8 ஆகிய வகுப்புகளில் படித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அரசு 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
ஆனால் பூதத்தார் மற்றும் அவனது தம்பி சிவசண்முகத்தை மட்டும் பள்ளி நிர்வாகம் தேர்ச்சி செய்யாமல் அதே வகுப்பில் மீண்டும் படிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பூவலிங்கம் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த பூவலிங்கம் கடந்த 10-ந்தேதி தனது வீட்டில் குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். இன்றும் தொடர்ந்து 4-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
Next Story