என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
களக்காட்டில் மது விற்ற மூதாட்டி கைது
களக்காடு அருகே கீழதேவநல்லூரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் மது விற்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் கீழதேவநல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த மணி மனைவி லெட்சுமி (55) வெள்ளை நிற சாக்கு பையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story