என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சேலத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலம் நெத்திமேட்டில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் மாரியப்பன் (வயது 36). மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி.

    இவர் கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி வீட்டில் உள்ள தனது அறையில் உள்ள மின்சார ஸ்விட்ச்சை போட்ட போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் காயம் அடைந்த மாரியப்பனை அவரது குடும்பத்தினர்,  உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் இன்று  வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் மாரியப்பன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×