என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொலை
  X
  கொலை

  அசோக் நகரில் குடும்ப தகராறில் அக்காள் கணவரை அடித்து கொன்ற வாலிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை அசோக் நகரில் குடும்ப தகராறில் அக்காள் கணவரை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  போரூர்:

  சென்னை அசோக் நகர் 32-வது தெருவைச் சேர்ந்தவர் குமார்(வயது35). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அன்னலட்சுமி.

  குமார் தினமும் மது குடித்து வந்து மனைவியிடம் ரகளையில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவும் அவர் வழக்கம்போல் மதுபோதையில் வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

  இதனால் ஆத்திரம் அடைந்த அன்னலட்சுமி அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

  ஆனாலும் கோபத்தில் இருந்த குமார் மாமியார் வீட்டிற்கு சென்றும் மனைவி அன்னலட்சுமியை தாக்கியதாக தெரிகிறது. இதனை தடுக்க முயன்ற மாமியாரையும் அவர் சரமாரியாக தாக்கினார்.

  இதனை கண்டு வீட்டில் இருந்த அன்னலட்சுமியின் தம்பி முனுசாமி ஆத்திரம் அடைந்தார். அவர் அக்காள் கணவர் குமாருடன் கடும் வாக்குவதத்தில் ஈடுபட்டார்.

  இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது குமாரை தாக்கி கீழே முனுசாமி தள்ளினார்.

  இதில் நிலை தடுமாறி விழுந்த குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வந்தது.

  இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனுசாமியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
  Next Story
  ×